ட்ரம்பின் அடுத்த இலக்கு! ஹோர்முஸை எளிதாகத் திறக்க முடியும் - அறிவித்த ட்ரம்ப்
United States of America
Iran
Middle East
Strait of Hormuz
By Sajithra
ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) அமெரிக்காவால் மிக எளிதாகத் திறக்க முடியும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
'Truth Social பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இன்னும் சிறிது காலம் கிடைத்தால் இந்த இலக்கை எட்ட முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப் தனது பதிவில் கூறியுள்ளதாவது, "இன்னும் கொஞ்சம் காலம் கிடைத்தால், நம்மால் மிக எளிதாக ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க முடியும் (OPEN THE HORMUZ STRAIT).
உலகிற்கு அதிர்ஷ்டம்
அங்கிருக்கும் எண்ணெயைக் கைப்பற்றி (TAKE THE OIL), அதன் மூலம் பெரும் செல்வத்தைச் சம்பாதிக்க முடியும். இது உலகிற்கே ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டமாக (GUSHER) அமையும்" என குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு மிகவும் முக்கியமான இந்த கடல் வழித்தடத்தைத் திறப்பது குறித்து ட்ரம்ப் தொடர்ச்சியாகப் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகிறார்.
குறிப்பாக, மேற்கத்தேய நாடுகள் தங்களது எண்ணெய் விநியோகத்தை உறுதிப்படுத்த இராணுவ ரீதியான பலத்தைப் பிரயோகித்து இந்த வழித்தடத்தைப் பாதுகாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி வருகின்றார்.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் உலகளவில் மசகு எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில், ட்ரம்பின் இந்த "எண்ணெயைக் கைப்பற்றும்" கருத்து சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US