இந்தியா - சீனா தொடர்பில் கவலை வெளியிட்ட ட்ரம்ப்
இந்தியாவும் ரஸ்யாவும் சீனாவிடம் தம்மை இழந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பீய்ஜிங்கில் இந்திய, ரஸ்ய மற்றும் சீன தலைவர்கள் ஒன்றிணைந்த நிகழ்வை கோடிட்டு அவர் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியா - சீனா
நாம் இந்தியாவையும் ரஸ்யாவையும் ஆழமான, இருண்ட சீனாவிடம் இழந்துவிட்டோம் என்று தெரிகிறது.
அவர்கள் நீண்ட மற்றும் வளமான எதிர்காலத்தை ஒன்றாகக் கொண்டிருக்கட்டும்!" என்றும் ட்ரம்ப் தமது சமூக ஊடகப் பதிவில் எழுதியுள்ளார்.
எனினும் ட்ரம்பின் இந்த பதிவு குறித்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
சீன வெளியுறவு அமைச்சகம் உடனடியாக பதிலளிக்கவில்லை, அதேநேரம் கிரெம்ளினின் பிரதிநிதிகளும் பதில் எதனையும் வழங்கவில்லை.
இதேவேளை உக்ரைன் போர் தொடர்பில், விரைவில் புடினுடன் பேச திட்டமிட்டுள்ளதாக ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது தெரிவித்துள்ளார்.
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் தீர்த்தத் திருவிழா



