அடுத்து கியூபா தான்..! ட்ரம்ப் வைத்த அடுத்த நகர்வு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மியாமியில் நடைபெற்ற முதலீட்டாளர் கருத்தரங்கம் ஒன்றில் ஆற்றிய உரையின்போது, "அடுத்து கியூபா தான்" என்று கூறியுள்ளார்.
அந்த உரையில் அவர், வெனிசுலா மற்றும் ஈரானில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளின் வெற்றிகளையும் புகழ்ந்துரைத்துள்ளார்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி
அந்த நாட்டை வைத்துத் துல்லியமாக என்ன செய்யத் திட்டமிட்டுள்ளார் என்பதை ட்ரம்ப் குறிப்பிடவில்லை என்றாலும், கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் ஹவானாவில் உள்ள அரசாங்கம் வீழ்ச்சியின் விளிம்பில் இருப்பதாகத் தாம் நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

அண்மைக் வாரங்களில் அவரது நிர்வாகம் கியூபாவின் தலைமைத்துவத்தின் சில பிரிவுகளுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது,
இராணுவ மோதலைத் தவிர்ப்பதற்காக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கியூபா ஜனாதிபதி மிகுவல் தியாஸ்-கானெல் ஒப்புக்கொண்டுள்ளார்.
கியூபாவின் எண்ணெய் தேவைகளில்
மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் போக்குவரத்தை இயக்குவதற்கு கியூபா சார்ந்திருக்கும் எண்ணெய் இறக்குமதியில் ஏற்பட்ட இடையூறுகளால் அதன் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜனவரியில், தற்போது பதவியிறக்கப்பட்ட வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்வதற்கான அமெரிக்க நடவடிக்கைக்கு முன்னர், கியூபாவின் எண்ணெய் தேவைகளில் பெரும்பகுதியை வெனிசுவேலா வழங்கி வந்தது.
ஆனால், வொஷிங்டனின் அழுத்தத்திற்குப் பணிந்து, காரகாஸின் புதிய அரசாங்கம் அந்த விநியோகங்களை நிறுத்தியுள்ளது.
மார்ச் மாதத் தொடக்கத்தில், கியூபா ஒரு “நட்பு ரீதியான கையகப்படுத்தலுக்கு” உள்ளாகலாம் என்று கூறிய ட்ரம்ப், பின்னர், “அது ஒரு நட்பு ரீதியான கையகப்படுத்தலாக இல்லாமல் இருக்கலாம்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஒன்றாக சுற்றுலா சென்றுள்ள எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகர்கள்... எங்கு சென்றுள்ளார்கள் பாருங்க Cineulagam
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri