ஈரானின் மின்சார - எரிசக்தி நிலையங்கள் மீதான இராணுவ தாக்குதல்! ட்ரம்ப் சற்றுமுன்னர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
ஈரானின் மின்சார மற்றும் எரிசக்தி நிலையங்களை இலக்காகக் கொண்ட இராணுவ தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்கத் தீர்மானித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையில் வார இறுதியில் “பயனுள்ள பேச்சுவார்த்தைகள்” நடைபெற்றுள்ளதாகவவும் குறிப்பிட்டார்.
ஐந்து நாட்களுக்கு ஒத்திவைப்பு
தனது சமூக வலைத்தளமான ட்ருத் சோசியலிலே இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
“குறித்த பதிவில், மத்திய கிழக்கில் நமது பகைமைகளுக்கு ஒரு முழுமையான மற்றும் மொத்தத் தீர்வு காண்பது தொடர்பாக, கடந்த இரண்டு நாட்களாக அமெரிக்க ஐக்கிய நாடுகளும் ஈரான் நாடும் மிகவும் நல்ல மற்றும் பயனுள்ள உரையாடல்களை நடத்தியுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வாரம் முழுவதும் தொடரவிருக்கும், ஆழமான, விரிவான மற்றும் ஆக்கப்பூர்வமான இந்த உரையாடல்களின் தன்மை மற்றும் தொனியின் அடிப்படையில், நடைபெற்று வரும் சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்களின் வெற்றியைப் பொறுத்து, ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு எதிரான அனைத்து இராணுவத் தாக்குதல்களையும் ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு போர் அமைச்சகத்திற்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்.
இந்த விஷயத்தில் கவனம் செலுத்தியதற்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் அனுமதிக்காவிட்டால், திங்கட்கிழமை மாலைக்குள் அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ட்ரம்ப் அச்சுறுத்தியிருந்தார்.

கடந்த வாரம் வரை, ஈரானுடன் போர்நிறுத்தத்தை முன்னெடுப்பதில் தனக்கு விருப்பமில்லை என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.
"நாம் பேச்சுவார்த்தை நடத்தலாம், ஆனால் நான் போர்நிறுத்தம் செய்ய விரும்பவில்லை," என்று அவர் வெள்ளிக்கிழமை பிற்பகல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri