பிரதமர் மோடி ஒரு சிறந்த நண்பர்.. மனம் திறந்த ட்ரம்ப்
இந்தியா ஒரு முக்கியமான நட்பு நாடு, பிரதமர் மோடி ஒரு சிறந்த நண்பர் என்று இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவை ஒரு அற்புதமான நாடு என்று அழைத்ததாகவும், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.
உலகின் பழமையான நாகரீகங்களில் ஒன்றின் தாயகமாக இந்தியா உள்ளது.
தொலைபேசி அழைப்பு
இது ஒரு அற்புதமான நாடு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கு ஒரு முக்கியமான கூட்டாளி.

பிரதமர் மோடி எங்களுக்கு ஒரு சிறந்த நண்பர் என்று ட்ரம்ப்கூறியதாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு, வர்த்தகம், எரிசக்தி குறித்து ட்ரம்ப்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இதன்போது, அமெரிக்க, இந்திய இருதரப்பு ஒத்துழைப்பு வலுவடைவதில் திருப்தி என பிரதமர் மோடி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.