அநுர உட்பட பலருக்கு ட்ரம்ப் விடுக்கவுள்ள எச்சரிக்கை
சர்வதேச பொருளாதார அரங்கில் டொலருக்கு நிகராக பிரிக்ஸ் நாணயத்தை கொண்டுவரும் திட்டமானது, அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பின்(Donald Trump) எச்சரிக்கையை பெற்றுள்ளது.
மேலும், பிரிக்ஸ் சர்வதேச அமைப்பில், உலகில் வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளான சீனா மற்றும் இந்தியா அடங்கியுள்ளமை அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக காணப்படுகிறது.
இந்நிலையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மூன்று நாள் அரசு பயணமாக இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தை மேற்கோள்காட்டி வெளியாகிய செய்தியில், பிரிக்ஸ் அமைப்பில்(BRICS) இணைவதற்கான இலங்கையின் ஆர்வம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இலங்கை அவ்வாறு பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அது அமெரிக்காவின் எச்சரிக்கையை பெறும் எனவும் கூறப்படுகிறது.
இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட, கனடாவில் இருக்கக்கூடிய அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம் பிரிக்ஸ் கூட்டு திட்டத்தில் இலங்கை கைகோர்த்தால் அது அமெரிக்காவிடம் இருந்து பாரதூரமான எதிர்வினைகளை சந்திக்க நேரிடும் என தெரிவித்தார்.
மேலும் இது அநுரகுமார உள்ளிட்ட தரப்புக்கு எச்சரிக்கையாக மாறும் எனவும் கூறினார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |