புடினுக்கு என்ன நடந்தது! உக்ரைன் தாக்குதலுக்கு ட்ரம்ப் எதிர்வினை
உக்ரைன் மீதான தீவிர ரஷ்ய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்வினையாற்றியுள்ளார்.
புடினுடனான தனது நட்புறவைப் பற்றி அவர் நீண்ட காலமாக பெருமையாகக் கூறி வந்தார்.
எனினும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை தொடர்ந்து ட்ரம்ப் தனது ஆதங்கங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
புடினுக்கு என்ன நடந்தது
"புடின் செய்வதில் நான் மகிழ்ச்சியடையவில்லை. அவர் நிறைய பேரைக் கொல்கிறார். புடினுக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை.

நான் அவரை நீண்ட காலமாக அறிவேன், எப்போதும் அவருடன் பழகுவேன், ஆனால் அவர் நகரங்களுக்குள் ஏவுகணைகளை அனுப்பி மக்களைக் கொல்கிறார்," என ட்ர்ம்ப் கூறியுள்ளார்.
எனினும் உக்ரைனை விட ரஷ்யா ஒரு சமாதான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அதிக விருப்பத்துடன் உள்ளது என்பதை மீண்டும் மீண்டும் புடின் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அறிவுக்கரசிக்கு நடந்த தரமான சம்பவங்கள்... வைரலாகும் போட்டோ Cineulagam