தேர்தலுக்காக பிரசாரத்தில் களமிறங்கிய ட்ரம்ப்பின் பேத்தி
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 5ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், 17 வயதான டொனால்ட் ட்ரம்ப்பின் (Donald Trump) பேத்தி காய் மேடிசன் (Kai Madison Trump) பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் முக்கிய வேட்பாளராக ஜனநாயகக் கட்சி சார்பாக ஜோ பைடனும் (Joe Biden) குடியரசுக் கட்சி சார்பாக டொனால்ட் ட்ரம்ப்பும் போட்டியிடவுள்ளனர்.
இந்நிலையில், தேர்தலுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ட்ரம்ப் மீது கடந்த 13ஆம் திகதி துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டிருந்தது.
கண்டனம்
இந்த தாக்குதலில் வலது காதில் ஏற்பட்ட காயத்துடன் டிரம்ப், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
Kai Trump gives a heartwarming speech at the RNC about her grandfather President Donald Trump ❤️??
— KanekoaTheGreat (@KanekoaTheGreat) July 18, 2024
"To me, he's just a normal grandpa. He gives us candy and soda when our parents aren't looking. He always wants to know how we are doing in school. When I made the honor roll, he… pic.twitter.com/zA6UlriqaA
இதனையடுத்து, மில்வாக்கி நகரில் நடைபெற்ற குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்துகொண்ட ட்ரம்ப்பின் பேத்தி குறித்த தாக்குதல் சம்பவத்துக்கு எதிராக தனது கண்டனத்தை வெளியிட்டார்.
என்னுடைய தாத்தாவும் சாதாரண தாத்தா போல் எனது பெற்றோருக்கு தெரியாமல் மிட்டாய்களை வாங்கித் தருவார். எனது கல்வியில் மிகுந்த அக்கறை கொண்டிருப்பார். அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மேன்மை
ஒரு மனிதரால் மற்றொரு மனிதர் மீது இதுபோன்ற தாக்குதலை நிகழ்த்த முடிகிறது என்பதை நினைக்கும்போது மிகுந்த கவலையளிக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், அமெரிக்காவின் மேன்மைக்காக எனது தாத்தா ஒவ்வொரு நாளும் போராடுவார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |