அமெரிக்காவின் அடுத்த கட்ட நகர்விற்கு இந்தியா எடுத்துள்ள சாமர்த்திய தீர்மானம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) ஆட்சியில் நாடுகடத்தப்படவுள்ள 18,000 புலம்பெயர்ந்தோரை திரும்பப் பெறுவதற்கு இந்தியா (india) ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்திய - அமெரிக்காவின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், வர்த்தகப் போரைத் தவிர்க்கவும் ட்ரம்புடன் இணைந்த செயற்படும் முகமாக இந்தியா இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்திய புலம்பெயர் மக்கள்...
இருப்பினும், ஆவணமற்ற குடியேற்றவாசிகளை கண்காணிப்பதில் உள்ள சவால்கள் காரணமாக உண்மையான எண்ணிக்கை 18,000 ஐ விட அதிகமாக இருக்கலாம் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்கான தனது கொள்கையை பற்றி குரல் கொடுத்து வரும் ட்ரம்ப் ஆட்சியுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்துவதற்கு இந்தியா மேற்கொண்டுள்ள ஒரு முயற்சியாகவே இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
ட்ரம்பிற்கு இந்த விடயத்தில் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம், ட்ரம்ப் நிர்வாகம் மாணவர் விசாக்கள் மற்றும் திறமையான தொழிலாளர்களுக்கான H-1B திட்டம் உள்ளிட்ட சட்டப்பூர்வ குடியேற்ற வழிகளைப் அதற்கு ஈடாக செயற்படுத்தும் என்று இந்தியா எதிர்பார்த்துள்ளது.
இந்நிலையில், புலம்பெயர் விவகாரத்தில் இந்தியாவின் ஒத்துழைப்பு, அமெரிக்காவுடன் வலுவான உறவைப் பேணுவதற்கான முதன்மையான திட்டமாகவே நோக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |