சிக்கலான அணுசக்தித்திட்டம் - இறுதிக்கட்டத்திற்கு நகர்த்தும் முன்மொழிவு - ஈரான் அதிகாரி விளக்கம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பால் இதுவரை நிராகரிக்கப்பட்ட ஈரானின் புதிய முன்மொழிவு குறித்த தகவல்களை சிரேஷ்ட ஈரானிய அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தைத் திறந்து, ஈரான் மீதான அமெரிக்க முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருவது இதன் முக்கிய நோக்கமாகும்.
வங்கிக்கணக்குகளை பயன்படுத்துவோர் கவனமாக இருக்குமாறு அவசர அறிவுறுத்தல்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சிக்கலான அணுசக்தித்திட்டம்
அத்துடன், சிக்கலான அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தற்போதைக்கு ஒத்திவைத்து, அதனை இறுதிக் கட்டத்திற்கு நகர்த்துவது என முன்மொழியப்பட்டுள்ளது.

இஸ்ரேலும் அமெரிக்காவும் மீண்டும் தாக்குதல் நடத்த மாட்டோம் என்ற உத்தரவாதத்தை வழங்கினால், போர் முடிவுக்கு வரும் எனத் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் நீரிணையைத் திறந்தால், அமெரிக்கா தனது முற்றுகையை விலக்கிக்கொள்ளும் எனவும் இந்த முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு உடன்படிக்கையை எளிதாக்கும் நோக்கில் இந்த குறிப்பிடத்தக்க மாற்றத்தை முன்மொழிந்துள்ளதாக ஈரான் நம்புவதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
பிரித்தானியாவில் அரிய உயிரியல் நிகழ்வு: இரண்டு தந்தைக்கு பிறந்த இரட்டையர்கள்: எப்படி சாத்தியம்? News Lankasri
கோமதியின் பேச்சால் கடுப்பான தங்கராஜ்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம் Cineulagam