ரஷ்யா - உக்ரைன் போரின் இறுதி முடிவு! ட்ரம்பால் எழுந்துள்ள எதிர்பார்ப்பு...
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி அமெரிக்க டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர 28 அம்சங்களைக் கொண்ட அமைதி திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பரிந்துரை செய்துள்ளார்.
ரஷ்யா- உக்ரைன் போர்
ட்ரம்ப்பின் இந்தப் பரிந்துரைகள் ரஷ்யாவுக்கு சாதகமாகவும், உக்ரைனுக்கு பாதகமாகவும் இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறியிருந்தார்.

போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்கா மேற்கொண்டு நடவடிக்கைகள் மீதான நன்றியை உக்ரைன் மறந்துவிட்டதாக ஜனாதிபதி ட்ரம்ப் கடுமையாக சாடியிருந்தார்.
ஜெனீவாவில் உக்ரைன் அதிகாரிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் இன்று அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரிய முன்னேற்றம் ஏற்படுவது உண்மையில் சாத்தியமா? நீங்கள் அதைப் பார்க்கும் வரை நம்பாதீர்கள், ஆனால் ஏதாவது நல்லது நடக்கலாம். அமெரிக்காவை கடவுள் ஆசீர்வதிப்பார் என்று ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.
மிக மோசமான வீழ்ச்சி... மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்படலாம்: எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள் News Lankasri