மலேசிய அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு..
16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
சிறுவர்கள் தடை
ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது. சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து முறைபாடுகள் எழுந்து வருகின்றன.

இதனிடையே 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களில் கணக்குகளை தொடங்கவோ, பயன்படுத்தவோ அவுஸ்திரேலியா அரசு தடை விதித்துள்ளது. இது வரும் டிசம்பர் 10ஆம் முதல் நடைமுறைக்கு வருகின்றது.
இந்தநிலையில், 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.
மலேசிய அரசு முடிவு
நிதி மோசடிகள், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற நிகழ்நிலை அபாயங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் வகையில் வழிமுறைகளை வகுத்து வருவதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

ஏற்கனவே டென்மார்க், நோர்வே உள்ளிட்ட நாடுகள் 15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri