ஏவப்பட்ட பாரிய இரு ஏவுகணைகள்.. தாக்குதலுக்கு முன் ட்ரம்ப் மேற்கொண்ட தொலைபேசி அழைப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையே தொலைபேசி வழியிலான உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
ஈரானிலிருந்து ஐக்கிய அமீரகத்தை நோக்கி இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட முன் இந்த அழைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை
இந்த உரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலன்களை மேம்படுத்துவதற்காக உறவுகளை வலுப்படுத்தும் வழிகள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடியதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தற்போதைய கள நிலவரங்கள் குறித்தும் அண்மைக்கால மாற்றங்கள் குறித்தும் இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்ட போதிலும், விவாதிக்கப்பட்ட பொருட்கள் குறித்து கூடுதல் விபரங்கள் எதனையும் செய்தி நிறுவனம் வெளியிடவில்லை.
ஹோர்முஸ் நீரிணையை நிர்வகிப்பது தொடர்பாக ஈரானுடன் ஒப்பந்தம் செய்ய முயன்ற அமீரகத்தின் அண்டை நாடான ஓமான் மீது குண்டுவீச்சு நடத்தப்படும் என ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்த மறுநாளே இந்தத் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது.
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri