ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல்: ஒருவர் காயம்
ஹோர்முஸ் நீரிணைப் பகுதி ஊடாகப் பயணித்துக்கொண்டிருந்த வணிகக் கப்பலொன்று இனந்தெரியாத ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
இந்தத் தாக்குதலில் கப்பலின் இயந்திரப் பகுதி பலத்த சேதமடைந்துள்ளதுடன், ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று(18) அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் கப்பலின் பாதுகாப்பு அதிகாரி UKMTO அமைப்புக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
தீவிர விசாரணை
அதனையடுத்து, எஞ்சிய மாலுமிகளை மீட்கும் நடவடிக்கைகளில் ஓமான் கடலோரப் பாதுகாப்புப் படையினர் உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இந்தத் தாக்குதலினால் இதுவரை எவ்வித சுற்றுச்சூழல் பாதிப்புகளும் ஏற்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன், அப்பகுதியினூடாகப் பயணிக்கும் ஏனைய கப்பல்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறும், சந்தேகத்திற்கிடமான நகர்வுகள் தென்படின் உடனடியாகத் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri