பிரித்தானியாவிற்கு ரஷ்யா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
உக்ரைனுக்கு ட்ரோன்களை வழங்கி, ரஷ்ய எல்லைக்குள் தாக்குதல்களை நடத்த உதவுவதற்கு எதிராக பிரித்தானியா கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
பிரித்தானிய தயாரிப்பு ட்ரோன்கள் முதன்முறையாக ரஷ்ய எல்லைக்குள் நீண்டதூரத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்த செய்தி குறித்து லண்டனிலுள்ள ரஷ்ய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், உக்ரேனின் தீவிரவாத இயந்திரத்திற்குப் பிரித்தானியா வழங்கும் ஆதரவு அதிகரிக்க அதிகரிக்க, அதற்காக அது செலுத்தும் விலையும் அதிகமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
தாக்குதல்
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் தளபாடங்கள் சேமிப்பு மையங்களைக் குறிவைத்து உக்ரைன் நீண்டதூரம் பாயும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
பிரித்தானிய தயாரிப்பு ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு நேரடியாக உறுதிப்படுத்தவில்லை.
இருப்பினும், புடினின் சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உக்ரைனுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி தோளோடு தோள் நிற்பதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
ஏற்கனவே, 752 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான நிதி உதவித் திட்டத்தின் கீழ், 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் 150,000 ட்ரோன்களை உக்ரைனுக்கு வழங்க பிரித்தானியா உறுதியளித்துள்ளது.
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan