வெள்ளை மாளிகையில் வெளியாகவுள்ள முக்கிய கூட்டறிக்கை
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்கவுள்ளார்.
இச்சந்திப்பின் போது, ஓவல் அலுவலகத்தில் இருவரும் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக இஸ்ரேலிய ஊடகம் தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த பெப்ரவரியில் இடம்பெற்ற அவர்களின் கடைசி சந்திப்பில் அவர்கள் சந்தித்தபோது, ட்ரம்ப் ஓவல் அலுவலகத்தில் 20 நிமிடங்களுக்கும் மேலாக பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
சிறப்பு கலந்துரையாடல்
இந்நிலையில், இரு நாட்டு தலைவர்களின் உதவியாளர்களுடனான பெரிய சந்திப்பில் அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவன் விட்காஃப் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக இஸ்ரேலிய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இதன்போது, இஸ்ரேலிய இறக்குமதி பொருட்களுக்கு 17 வீத வரிகளை விதிக்கும் அமெரிக்க முடிவு குறித்து இஸ்ரேலிய பிரதமர் ட்ரம்புடன் விவாதிக்கவுள்ளார்.
அதேவேளை, இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "கட்டணங்கள், காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நமது பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சிகள், இஸ்ரேல் - துருக்கி உறவுகள், ஈரானிய அச்சுறுத்தல் மற்றும் ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிரான போர்" ஆகியவை தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |