உலக பொருளாதாரத்தின் புதிய சகாப்தம்: பெரும் ஏமாற்றத்தில் ஸ்டார்மர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பரஸ்பர வரி விதிப்புகளின் காரணமாக, ஐரோப்பிய கண்டம் உலகப் பொருளாதாரத்திற்கான ஒரு புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளது என பிரத்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
முக்கிய ஐரோப்பிய தலைவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டார்மரின் தொலைபேசி அழைப்பில், ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஜெர்மன் சான்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் மற்றும் ஜெர்மனியின் சான்சலர்-இன்-காப்பாளர் பிரீட்ரிக் மெர்ஸ் ஆகியோர் உள்ளடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பிற்கு எதிராக நடவடிக்கை
அதேவேளை, ட்ரம்பின் புதிய வரிகளால் ஸ்டார்மர் பெரும் ஏமாற்றமடைந்துள்ளார் என்றாலும், அனைத்து நிகழ்வுகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார் என்றும் சர்வதேச ஊடகம் ஒன்று கூறியுள்ளது.
மேலும், இது ட்ரம்பின் வரிகள் குறித்து பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மரின் முந்தைய அறிக்கைகளின் கருத்துக்களை எதிரொலிப்பதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் போர் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ட்ரம்பின் அணுகுமுறையால், முக்கிய ஐரோப்பிய நட்பு நாடுகளுடனான ஸ்டார்மரின் உறவு ஏற்கனவே பதற்றமாக உள்ளது.
இந்நிலையில், ட்ரம்பின் வரி காரணமாக, உலகப் பொருளாதாரத்திற்கு பெரும் ஆபத்து ஏற்படும் என ஐரோப்பிய ஆணையத் தலைவர் முன்னதாகவே எச்சரிந்திருந்தார்.
மேலும், தற்போது புதிய பரஸ்பர வரிகளுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கைகளைத் தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |