வரலாறு காணாத தாக்குதல்! ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
தங்களுடன் அணு ஆயுத உடன்படிக்கைக்கு வர மறுத்தால், ஈரான் மீது வரலாறு காணாத அளவுக்கு குண்டுகளை வீசுவோம் என்று அமெரிக்க டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஆனால் அப்படியான தாக்குதல் நடந்தால் மேற்காசியாவில் அமெரிக்காவுக்கு என இருக்கும் கட்டமைப்புகள் அனைத்தும் அடித்து நொருக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா முன்னதாக பல்வேறு தடைகளை விதித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி
இந்த தடைகள் காரணமாக அந்நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

யுரேனிய பயன்பாட்டின் காரணமாக அமெரிக்கா ஈரானை கடுமையாக எச்சரித்து வருகிறது.
90% செறிவூட்டம் செய்யப்பட்டால் அந்த யுரேனியத்தை அணு குண்டு தயாரிக்க பயன்படுத்த முடியும். இதன் விளைவாக அமெரிக்கா ஈரானை எச்சரிக்கை செய்து வருகிறது.
ஈரானின் யூரேனியம் செறிவூட்டல்
ஆனால் இப்போது வரை ஈரானின் யூரேனியம் செறிவூட்டல் 60-ஐ தாண்டவில்லை என கூறப்படுகிறது..

தங்கள் நாட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே 60% செறிவூட்டலை செய்து வருகிறோம் என்று ஈரான் கூறியுள்ளது.
இதனை ஏற்காத ட்ரம்ப், உடனடியான அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இணைந்து செறிவூட்டலை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
இதனை ஈரான் செய்யவில்லை எனில், அந்நாட்டின் மீது வரலாறு காணாத அளவுக்கு குண்டுகளை வீசுவதாகவும் எச்சரித்துள்ளார்.
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam