அவசரமாக அமெரிக்காவை அழைத்த புடின்.. கடும் சீற்றத்தில் ட்ரம்ப்
உக்ரைன் மீது, அண்மையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜெலென்ஸ்கி கடும் கோபத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் வீடுகளில் ஒன்றின் மீது உக்ரேனிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி இருப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், இவ்விடயம் குறித்து கலந்துரையாடுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளார்.
ட்ரோன் தாக்குதல்
இதன் போது, புடினின் வீடுகளில் ஒன்றின் மீது உக்ரேனிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியமை தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புடின், தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மீது கடும் கோபத்தில் இருப்பதாக ட்ரம்ப் கூறினார் என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக ட்ரம்ப் தெரிவித்துள்ள தகவலில், புடின் என்னுடன் தொலைபேசியில் பேசினார், அப்போது அவரது வீட்டின் மீது ட்ரோன் தாக்குதல் நடந்து இருப்பதாக தெரிவித்தார்.

இதனால் நான் மிகவும் கோபமடைந்துள்ளேன். ஒரு நாட்டு தலைவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்துவது சரியானது இல்லை, மேலும் இது போன்ற தாக்குதல் நடவடிக்கைக்கும் இது சரியான நேரம் இல்லை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டதாக கூறப்படுகின்றது.
அதேவேளை, ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டுக்கு உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி: கடுமையாகத் தாக்கிய பிரபலம் News Lankasri