இலட்சக் கணக்கானோர் பலியாகக் காரணமாகும் ட்ரம்ப் : வெளியான அறிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நிதிக் குறைப்பு நடவடிக்கைகள் எடுத்திருப்பதால், எச்.ஐ.வியால் பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்கப்படும் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கப்படாவிட்டால் பல இலட்சம் பேர் மரணமடையும் நிலை ஏற்படும் என ஐக்கிய நாடுகள்(UN) சபையின் அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த நோய்க்கு எதிரான போராட்டம் பல ஆண்டு காலத்துக்குப் பின்னோக்கிக் கொண்டு சென்றுவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2029ஆம் ஆண்டுக்குள்
அமெரிக்காவின் எச்.ஐ.வி நிவாரண அவசர கால திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதி நிறுத்தப்பட்டதால், ஐக்கிய நாடுகள் சபையின் பல திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன.
அதனால், வரும் 2029 ஆம் ஆண்டுக்குள் 60 இலட்சம் பேருக்கு எச்.ஐ.வி பாதிப்பு ஏற்படுவதோடு, 40 இலட்சம் பேர் எச்.ஐ.வியால் மரணமடையும் நிலை ஏற்படும் என ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சியடையாத நாடுகளில் எச்.ஐ.வி பாதித்த மக்களுக்குச் செய்யப்பட்டு வரும் பல்வேறு உதவிகள், உடனடியாக நிறுத்தப்படுவதன் மூலம், பல ஆண்டுகளுக்கு பின்னோக்கி, நிலைமை சென்றுவிடும் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றது.
இதனால், 2030 ஆம் ஆண்டளவில், எச்.ஐ.வி என்பது பொதுமக்களுக்கு அபாயமான நோயாக மாறிவிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri
