பேச்சுவார்த்தைக்கு ஜெலன்ஸ்கி அவசியமில்லை! ட்ரம்ப் விடுத்த பகிரங்க அறிவிப்பு
ரஷ்யா - உக்ரைன் இடையே 3 ஆண்டுகளாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீவிரம் காட்டி வரும் நிலையில் அவர் விடுத்துள்ள அறிவிப்பானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் ரஷ்ய மற்றும் உக்ரைன் ஜனாதிபதிகளுடன் ஆகியோருடன் தொலைப்பேசியில் பேசியதாகவும் இந்த நிலையில் ஜெலன்ஸ்கியை ட்ரம்ப் மீண்டும் சாடியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இதுதொடர்பாக ட்ரம்ப் கூறியதாவது,
பேச்சுவார்த்தை
ரஷ்ய ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை நன்றாக இருந்தது. ஆனால் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் ஜெலன்ஸ்கி இருப்பது அவசியமில்லை என்று கருதுகிறேன்.
அவர் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தையில் கடுமை காட்டி வருகிறார்.
இதனால் நான் நடத்தும் பேச்சுவார்த்தைகளில் ஜெலன்ஸ்கியோ வேறு உக்ரைன் அதிகாரிகளோ இடம்பெற வேண்டிய அவசியமில்லை.
புடின் - ஜெலன்ஸ்கி
ஆனால் போரை முடிவுக்குக் கொண்டுவர புடினும், ஜெலன்ஸ்கியும் நேரடியாக சந்தித்துப் பேச வேண்டும்.
உக்ரைன் எல்லா வகையிலும் ஒரு துணிச்சலான தேசம் என்பதையும் பதிவு செய்கிறேன். உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர புடின் விரும்புகிறார்.
உக்ரைன் போரை நிறுத்த இங்கிலாந்து பிரதமர் , பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரானும் எதுவும் செய்யவில்லை ” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |