நாங்கள் போர்நிறுத்தம் கோரவில்லை! ட்ரம்பின் அறிவிப்பை அதிரடியாக மறுத்தது ஈரான்
புதிய இணைப்பு
அமெரிக்காவிடம் போர்நிறுத்தம் கோரியதாகக் கூறப்படுவதை ஈரான் வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது.
ஈரான் போர்நிறுத்தம் கோரியதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ள கூற்று "பொய் மற்றும் ஆதாரமற்றது" என ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தக் கருத்துக்களை வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறியதாக ஈரான் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
ஈரானின் புதிய தலைவர், அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர், ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் சற்றுமுன்னர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த பதிவில், அவர் அந்த உயர் அதிகாரியின் பெயரைக் குறிப்பிடவில்லை, ஆனால் அந்த நபர் அதிக புத்திசாலியாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
கற்காலத்திற்கு அனுப்புவோம்!
"தனது முன்னோடிகளை விட மிகவும் தீவிரமயமற்றவராகவும், மிகுந்த புத்திசாலியாகவும் விளங்கும் ஈரானின் புதிய ஆட்சி ஜனாதிபதி (Iran’s New Regime President), அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை திறந்த, தடையற்ற மற்றும் தெளிவான நிலையில் இருக்கும்போது நாங்கள் பரிசீலிப்போம்.
அதுவரை, நாங்கள் ஈரானை முற்றிலுமாக அழிப்போம் அல்லது, அவர்கள் சொல்வது போல், கற்காலத்திற்குத் திருப்பி அனுப்புவோம்!” என பதிவிட்டுள்ளார்.