இந்தியா மீது ட்ரம்பின் அதிரடி நடவடிக்கை
இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் இந்திய பொருட்களுக்கான வரி 50 சதவீதமாக அதிகரித்துள்ளது.
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவிடம் இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கிவந்த நிலையில் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரியும், ரஷ்யாவுடன் கூடுதலாக வர்த்தகம் மேற்கொள்வதால் கூடுதலாக அபராதம் விதிப்பதாகவும் சமீபத்தில் அறிவித்தார்.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை
முதலில் ஆகஸ்ட் 01 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பு பின்னர் 07ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று ட்ரம்ப் அளித்த பேட்டியில், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தாததால், அடுத்த 24 மணி நேரத்தில் இந்த வரியை மேலும் கடுமையாக்க போவதாகவும் கூறியிருந்தார்.
இதன் மூலம் அடுத்த 24 மணி நேரத்தில் முடிவை மாற்றிக் கொள்ளும்படி நெருக்கடி கொடுத்து வந்த நிலையில், இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே 25 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில், தற்போது விதிக்கப்பட்ட வரி மூலம் இந்திய பொருட்களுக்கான வரி 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 5 மணி நேரம் முன்

ஆபத்தான நிலையில் ஈஸ்வரி, தனது அம்மாவுக்கு செக் வைத்த ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
