தனது உடல்நிலை குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்குப் பதிலளித்த ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது உடல்நிலை குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ளளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் கருத்து தெரிவிக்கையில், நான் முழுமையான" ஆரோக்கியத்துடன் இருக்கின்றேன். கடந்த 25 ஆண்டுகளாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவை விட அதிக வீரியம் கொண்ட ஆஸ்பிரின் மாத்திரைகளை உட்கொண்டு வருகின்றேன்.
பொதுவாக இதய பாதுகாப்புக்காக 81 மில்லகிராம் ஆஸ்பிரின் பரிந்துரைக்கப்படும் நிலையில், ட்ரம்ப் தினமும் 325 மில்லிகிராம் ஆஸ்பிரின் எடுத்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவப் பரிசோதனை
தனது இதயம் வழியாக தடிமனான இரத்தம் செல்வதை நான் விரும்பவில்லை.அதனால் தான் இரத்தத்தை மெலிதாக்க அதிக ஆஸ்பிரின் எடுக்கிறேன்," என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், தனது கைகளில் காணப்படும் காயங்கள் மற்றும் தழும்புகளை மறைக்க ஒப்பனை (Makeup) பயன்படுத்துவதாகவும், இது ஆஸ்பிரின் பயன்பாட்டினால் ஏற்படும் பக்கவிளைவு (Bruising) என்றும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் தான் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனை குறித்துப் பேசிய அவர், அது எம்.ஆர்.ஐ (MRI) ஸ்கேன் அல்ல, மாறாக ஒரு சி.டி (CT) ஸ்கேன் மட்டுமே என்று தெளிவுபடுத்தினார்.
உடற்பயிற்சி செய்வது தனக்கு "சலிப்பை" தருவதால், கோல்ஃப் விளையாடுவதைத் தவிர வேறு எவ்வித முறையான உடற்பயிற்சிகளையும் தான் செய்வதில்லை என்றும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 8 மணி நேரம் முன்
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri