ரஷ்ய ஜனாதிபதி புடினின் இல்லம் மீது தாக்குதல்: அமைதி முயற்சிகளில் பெரும் சிக்கல்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இல்லம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா சுமத்தியுள்ள குற்றச்சாட்டு, இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் அமைதி முயற்சிகளில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
வடமேற்கு ரஷ்யாவின் நோவ்கோரோட் (Novgorod) பகுதியில் உள்ள முடியின் குடியிருப்பை இலக்கு வைத்து, உக்ரைன் 91 நீண்ட தூர ட்ரோன்களை ஏவியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்கள்
இந்த ட்ரோன்கள் அனைத்தும் வான் பாதுகாப்பு அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இதில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளது.

இது குறித்துப் பேசிய கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், "இந்த பயங்கரவாத நடவடிக்கை அமைதிப் பேச்சுவார்த்தைகளைச் சீர்குலைக்கும் நோக்கில் செய்யப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, இனிவரும் பேச்சுவார்த்தைகளில் ரஷ்யா மிகவும் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கும்" என்று எச்சரித்துள்ளார்.
, இந்தத் தாக்குதல் எதனையும் தாங்கள் நடத்தவில்லை என்றும், இது ரஷ்யாவின் ஒரு புனையப்பட்டக் கதை என்றும் உக்ரைன் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இராஜதந்திர பதற்றம்
உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா கூறுகையில், "இதற்கு ரஷ்யாவிடம் எந்த ஆதாரமும் இல்லை. அமைதிப் பேச்சுவார்த்தையைக் கெடுக்கவும், தனது ஆக்கிரமிப்புத் தாக்குதல்களை நியாயப்படுத்தவும் ரஷ்யா இது போன்ற பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறது" என்று விமர்சித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இது குறித்து புடினுடன் தொலைபேசியில் பேசியதாகவும், இந்தச் சம்பவம் தனக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இராஜதந்திர ரீதியில் இந்தப் பதற்றம் நிலவி வரும் அதே வேளையில், யுக்ரைனின் ஒடேசா (Odesa) பகுதியில் உள்ள துறைமுகங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் தானியங்களை ஏற்றிச் சென்ற பனாமா நாட்டுக் கப்பல் சேதமடைந்ததோடு, எண்ணெய் சேமிப்பு கிடங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதற்குப் பதிலடியாகச் செர்னிஹிவ் (Chernihiv) எல்லையில் உள்ள பல குடியிருப்புகளில் இருந்து நீங்க உக்ரைன் அரசு உத்தரவிட்டுள்ளது.