சுனிதா வில்லியம்ஸின் சம்பளம்: டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட தகவல்
அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸிற்கு கூடுதல் சம்பளத்தை, தன் சொந்தப் பணத்தில் இருந்து கொடுப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) தெரிவித்துள்ளார்.
அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்(Sunita Williams) மற்றொரு வீரரான புட்ச் வில்மோர்(Butch-wilmore) 2024 ஜூன் 5ஆம் திகதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர்.
தொழில்நுட்ப கோளாறு
இவர்கள் இருவரும் ஆய்வுகளை நிறைவு செய்து 8 நாட்களில் பூமிக்கு திரும்ப இருந்த நிலையில் ஸ்டார் லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது.
விண்கலத்தின் த்ரஸ்டர்களில் கோளாறு, வாயு கசிவும் கண்டறியப்பட்டதால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ளனர்.
ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்ற பின், அவர்களை அழைத்து வர முயற்சி எடுத்தார். தொழில் அதிபர் எலான் மஸ்கின், ஸ்பேஸ் எக்ஸிற்கு சொந்தமான பால்கன் ரொக்கெட் வாயிலாக 'டிராகன்' விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டு கடந்த 19ம் திகதி இவர்கள் பூமிக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
சுனிதா வில்லியம்ஸின் சம்பளம்
இதையடுத்து, விண்வெளியில் ஒன்பது மாதங்களுக்கு மேல் இருந்த சுனிதாவுக்கு கூடுதலாக எவ்வளவு பணம் கிடைக்கும் என்ற விவாதம் எழுந்துள்ளது. அமெரிக்காவில்'நாசா'வில் பணிபுரிபவர்களும், அந்நாட்டின் மத்திய அரச ஊழியர்கள் தான் கருதப்படுகின்றார்கள்.
விடுமுறையில் பணியாற்றினாலோ, பணி நேரத்துக்கு அதிகமாக பணியாற்றினாலோ கூடுதல் சம்பளம் கிடையாது.
விண்வெளிக்கு செல்வது கூட, அலுவலக வேலைக்காக வேறு ஊருக்கு சென்று வருவது போலத்தான் கருதப்படும். இதன்படி, விண்வெளியில் பணி புரிந்ததற்காக ஒரு நாளைக்கு 5 அமெரிக்க டொலர் வீதம், 286 நாட்களுக்கு 1,430 டொலர், அதாவது இந்திய மதிப்பில், 1,22,980 ரூபாய் மட்டுமே கூடுதலாக கிடைக்கும். வழக்கமாக சுனிதாவும், வில்மோரும் ஆண்டுக்கு 1.05 கோடி ரூபாய் வரை பெறும் சம்பளத்துடன் இந்த சம்பளமும் சேர்த்து கொடுக்கப்படும்.
இவ்வளவு குறைந்த தொகை குறித்து உலக அளவில் ஆச்சரியமும், விவாதமும் எழுந்துள்ள நிலையில், ட்ரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் உரையாற்றியுள்ளார்.
சொந்தப் பணம்
அவர் தெரிவித்ததாவது,
“எலான் மஸ்க் இல்லையென்றால், விண்வெளி வீரர்கள் அங்கேயே நீண்ட காலம் இருக்க நேரிட்டிருக்கும். வேறு யார் அவர்களை அழைத்து வந்திருக்க முடியும்? அவர் தற்போது நிறைய கஷ்டங்களை சந்தித்து வருகிறார்.
9 மாதங்கள் வரை விண்வெளியில் இருந்த அவர்களியுன் உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர்களின் கஷ்டத்தை பார்க்கும்போது, இது பெரிதல்ல.
அவர்களுக்கு விண்வெளியில் கூடுதல் காலம் இருந்ததற்கு கூடுதலாக சம்பளம் வழங்குவது தொடர்பாக யாரும் என்னிடம் இதுவரை சொல்லவில்லை.
அப்படி சொன்னால், நான் என் சொந்தப் பணத்தில் இருந்தே எடுத்து தருவேன்” என குறிப்பிட்டுள்ளார்.
You May Like This..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
