வவுனியாவில் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து திடீர் சுற்றிவளைப்பு
வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து திடீர் சுற்றி வளைப்பு மேற்கொண்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு நபர்களை கைது செய்தல் மற்றும் போதைப் பொருளை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த விசேட நடவடிக்கை இன்று (24) மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சோமரத்ன விஜயமுனி அவர்களின் ஆலோசனைக்கு அமைய வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடியின் வழிகாட்டலில் சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் விஜயவன்ச தலைமையில் இந்த நடவடிக்கை சுமார் 3 மணி நேரம் முன்னெடுக்கப்பட்டது.
தேடுதல் நடவடிக்கை
இதன்போது, வவுனியா தேக்கவத்தை ஆலடி சந்தியில் இருந்து தேக்கவத்தை மைதானம் வரையிலான பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நீதிமன்றத்தல் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டவர்களை கைது செய்தல், குற்றச் செயல்கள் தொடர்பில் தேடப்படும் நபர்களை கைது செய்தல், போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுதல் போன்ற திட்டங்களுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, பொலிசாருக்கு உதவிய இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
