சிவில் மோசடி தொடர்பான வழக்கு விசாரணை : கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்த ட்ரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது வணிகங்களில் பல ஆண்டுகளாக நடந்த சிவில் மோசடி தொடர்பான விசாரணையில் நியூயோர்க் மாநில அட்டர்னி ஜெனரல் அலுவலகத்துடன் புலனாய்வாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் அமைப்பின் நிதி தொடர்பான நீண்டகால சிவில் விசாரணையில் சாட்சியமளிக்க ட்ரம்ப் நேற்று மாநில அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸின் அலுவலகத்தில் முன்னிலையாகியிருந்தார்.
விசாரணைக்கு வந்த பிறகு தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில், நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸின் விசாரணையை "ஒரு பழிவாங்கும் மற்றும் சுய சேவை மீன்பிடி பயணம்" என்று டிரம்ப் தெரிவித்துள்ளதுடன், இது அரசியல் உந்துதல் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்."
கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்தமைக்கான காரணம்
அதன்படி, எனது ஆலோசகரின் ஆலோசனையின் கீழ் மற்றும் மேற்கண்ட அனைத்து காரணங்களுக்காகவும், அமெரிக்க அரசியலமைப்பின் கீழ் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்படும் உரிமைகள் மற்றும் சலுகைகளின் கீழ் உள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டேன்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் நிறுவனம் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக நிதி மோசடி மற்றும் வரி மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இவை தொடர்பாக ட்ரம்ப், நிறுவனம் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் மீது நியூயோர்க் மாகாண நீதித்துறை வழக்கு பதிவு செய்து நீண்டகாலமாக விசாரணை நடத்தி வருகின்றது.
அரசு தொடர்பான இரகசிய ஆவணங்கள்
முன்னதாக, ட்ரம்ப் கடந்த ஆண்டு வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறியபோது அரசு தொடர்பான இரகசிய ஆவணங்களை எடுத்து சென்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நேற்று முன்தினம் புளோரிடாவில் உள்ள அவரது கடற்கரை இல்லமான மர்-எ-லாகோ என்ற எஸ்டேட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் அந்த ஒவ்வொரு குற்றச்சாட்டுகளிலும் தாம் தவறு செய்யவில்லை என்று டிரம்ப் தொடர்ந்து மறுத்து வருகிறார்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 15 மணி நேரம் முன்

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri
