யாரையுமே நம்பாத ட்ரம்ப்..! தொடர்ந்து நடைபெறும் போர்நிறுத்த முயற்சிகள்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீது தான் ஏமாற்றமடைந்தாலும் அவர் உடனான பேச்சுவார்த்தைகளை முழுமையாக கைவிடவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுடன் தொலைபேசியில் உரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, தான் யாரையும் தற்போது நம்புவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
ட்ரம்பின் எச்சரிக்கை
உக்ரைனில் அமைதி ஏற்படும் என்று பலமுறை நம்பியதாகவும், ஆனால் ஒவ்வொரு முறையும் ரஷ்யா தனது தாக்குதல்களைத் தொடர்ந்ததாகவும் ட்ரம்ப் விளக்கியுள்ளார்.
அத்துடன், 50 நாட்களில் போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால், ரஷ்யா கடுமையான வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
நேட்டோவைப் பற்றியும் பேசிய ட்ரம்ப், தற்போது கூட்டணியை ஆதரிப்பதாகக் கூறியுள்ளார்.
மேலும், சிறிய நாடுகள் பாதுகாப்பாக இருக்க உதவும் கூட்டுப் பாதுகாப்பில் தான் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
