நீதிமன்றில் முன்னிலையான ட்ரம்ப் - அமெரிக்காவில் நடக்கும் மிக அசாதாரண நிகழ்வு!
அமெரிக்க உயர்நீதிமன்றில் சற்று முன்னர், அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையாகியுள்ளார்.
பிறப்புரிமைக் குடியுரிமை வழக்கு
அமெரிக்காவில் சட்டவிரோதமாகவோ அல்லது தற்காலிகமாகவோ வசிக்கும் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகள் அமெரிக்கக் குடிமக்கள் அல்ல என்று அறிவிக்கும், பிறப்புரிமைக் குடியுரிமை குறித்த ட்ரம்பின் நிர்வாக உத்தரவு தொடர்பிலான வழக்கிற்காக அவர் இவ்வாறு நீதிமன்றம் சென்றுள்ளார்.

இந்தத் தவணையின் மிக முக்கியமான வழக்குகளில் ஒன்றாகும். அமெரிக்க வரலாற்றில் இது ஒரு அசாதாரண நிகழ்வாக பார்க்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் மிக உயர்மட்ட நபர்களுடன் இந்த நீதிமன்ற அமர்வு கூடியுள்ள நிலையில், வழக்கு தொடர்பான வாதங்கள் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ட்ரம்பிடம் ஈரான் அவசர கோரிக்கை.. வளைகுடா போரில் அதிரடி திருப்பம் - சற்று முன் வெளியான பரபரப்பு பதிவு!