பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் இடம்பெறும் ட்ரம்ப் - புடின் சந்திப்பு
அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி புடினை நேருக்கு நேர் சந்தித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சந்திப்பின்போது உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வர புடினுக்கு ட்ரம்ப் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரி விதிப்பை காரணம் காட்டி
மேலும் வரி விதிப்பை காரணம் காட்டி அவர் புடினுக்கு அழுத்தம் கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
🚨 BAD*SS! B-2 bomber and USA jets were directly over President Trump and Putin at the same time as they were walking to meet in Alaska.
— Eric Daugherty (@EricLDaugh) August 15, 2025
Putin got a VERY American welcome.pic.twitter.com/fOV7xqfXDw
ஒரு காலத்தில் ரஷ்யாவுக்கு சொந்தமாக இருந்த அலாஸ்கா மாகாணத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
ரஷ்யாவின் பழைய நகரில் ட்ரம்பும், புடினும் சந்தித்து பேசியது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
3 ஆண்டுக்கு மேலாக
முன்னதாக நேட்டோ எனப்படும் சர்வதேச இராணுவ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய முயற்சி செய்தது. இதில் உக்ரைன் சேர்ந்தால் தங்களின் இறையாண்மைக்கு ஆபத்து என கருதிய ரஷ்யா கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உக்ரைனுக்கு எதிராக போர் தொடுத்தது.
3 ஆண்டுக்கு மேலாக நடந்து வரும் இந்த போரில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். ஆனாலும் போர் முடிவுக்கு வரவில்லை.
இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
இதுதொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இருதரப்பினர் இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் பலன் கிடைக்காத நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




