ஈரான் உடனான ஒப்பந்தத்தை நாடாளுமன்ற மறுஆய்வுக்கு அனுப்ப ட்ரம்ப் சம்மதம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள புதிய அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க நாடாளுமன்றத்தின் மறுஆய்வுக்கு அனுப்புவது குறித்து தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், "இதைப்பற்றி நான் இதற்கு முன்பு யோசிக்கவில்லை, ஆனால் இப்போது இதனை நாடாளுமன்ற ஒப்புதலுக்கு நிச்சயம் அனுப்பி வைப்பேன்.
நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட
இந்த ஒப்பந்தத்தை யார் தான் எதிர்க்கப் போகிறார்கள்? இந்த யோசனை எனக்குப் பிடித்துள்ளது" என்று கூறினார்.
ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வந்து பிராந்தியப் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் இந்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க சட்டப்படி, ஈரான் தொடர்பான எந்தவொரு அணுசக்தி அல்லது முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்களும் நடைமுறைக்கு வரும் முன்பு நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று எம்பிக்கள் வலியுறுத்தி வந்த நிலையில் ட்ரம்பின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
தனி நாடு உருவாக்கப்படும் வரை
இதற்கிடையில், இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை மேம்படுத்துவதற்கான 'ஆபிரகாம் உடன்படிக்கையில்' மேலும் பல அரபு மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் விரைவில் இணையும் என்று தாம் நம்புவதாகவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவரை ஈரானுடன் நிலவி வந்த பதற்றமான சூழலே மற்ற நாடுகள் இதில் இணைவதற்கு முட்டுக்கட்டையாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போது நிலைமை சீராகியுள்ளதால் அனைத்து நாடுகளும் முன்வரும் என எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
இருப்பினும், பாலஸ்தீனத்திற்கு என்று ஒரு தனி நாடு உருவாக்கப்படும் வரை இஸ்ரேலுடன் எவ்வித சுமுக உறவையும் ஏற்படுத்த முடியாது என்று சவுதி அரேபியா உள்ளிட்ட முக்கிய அரபு நாடுகள் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri
உலகக் கோப்பை நடுவர் செய்த கைசைகை., FIFA-விற்கு இனவெறி கண்காணிப்பு அமைப்பு விடுத்த கோரிக்கை News Lankasri