2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரானுக்கு ஒபாமா இலஞ்சம் கொடுத்ததாக ட்ரம்ப் அதிரடி குற்றச்சாட்டு
பிரான்சில் நடைபெற்று வரும் ஜி7 உச்சிமாநாட்டின் போது செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு ஈரானுடன் மேற்கொள்ளப்பட்ட ஜேசிபிஓஏ அணுசக்தி ஒப்பந்தத்தின் போது, ஒபாமா நிர்வாகம் ஈரானுக்கு ஒரு விமானம் நிறைய பணத்தை அனுப்பி இலஞ்சம் கொடுக்க முயன்றதாக ட்ரம்ப் சாடியுள்ளார்.
அதிரடி குற்றச்சாட்டு
போயிங் 757 விமானம் மூலம் 1.7 பில்லியன் டொலர் ரொக்கப் பணம் டெஹ்ரானுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அது தொடர்பான புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் ஈரான் நாடானது ஒபாமாவைக் கண்டு எள்ளி நகையாடியதாகவும், ஆனால் தான் அத்தகைய வழிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றும் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam