ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மீது திரும்பிய ட்ரம்பின் பார்வை! 200 சதவீத வரி
விஸ்கி மீதான 50% வரி நிறுத்தப்படாவிட்டால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானத்திற்கு 200% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இது மதுபான வர்த்தகத்தில் பாரிய அழிவை ஏற்படுத்தும் என ஐரோப்பிய மதுபான உற்பத்தியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து உலகளாவிய வர்த்தகப் போர் நாளுக்கு நாள் விரிவடைந்துக் கொண்டே செல்கின்றது.
பொருளாதாரப் பார்வை
அமெரிக்காவில் இருந்து அனுப்பப்படும் உருக்கு மற்றும் அலுமினியம் போன்ற பொருட்களுக்கு 25% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதால் ட்ரம்ப்பின் பார்வை ஒன்றியத்தின் மீது திரும்பியுள்ளது.

ட்ரம்ப்பின் ஒட்டுமொத்த பொருளாதாரப் பார்வையின் மையப் பகுதியாக வரிகள் உள்ளன.

அவை அமெரிக்க உற்பத்தியை அதிகரிப்பதோடு அமெரிக்கர்களின் வேலைகளையும் பாதுகாக்கும் என அவர் நம்புகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவிலேயே அதிகபட்ச விலை.. துரந்தர் ஓடிடி உரிமை வாங்கிய நெட்பிலிக்ஸ்! புஷ்பா 2 சாதனையை தகர்த்தது Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri