கனேடிய பிரதமரின் அறிக்கையை நிராகரித்த இலங்கை
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் துரூடோ (Justin Trudeau) வெளியிட்ட அறிக்கையை இலங்கை நிராகரித்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.
தொலைபேசியூடாக ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்ட விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
"துரூடோவின் அறிக்கை, கனடாவின் அரசியல் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
போர் முடிவடைந்த 15ஆவது ஆண்டு நிறைவையொட்டி வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கை, கனடாவின் அப்பட்டமான இரட்டை நிலைப்பாட்டை அம்பலப்படுத்துகிறது.
இந்நிலையிலேயே, கனேடிய பிரதமர் 15 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விடயம் பற்றி பேசுகிறார், அதே நேரத்தில் பிற இடங்களில் நடப்பவற்றிற்கும் உதவுகிறார்.
மேலும், இலங்கை தனது பிரஜைகளின் மனித உரிமைக்கான நிலைப்பாடுகளை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளதுடன் சர்வதேச அரங்கில் நாட்டிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.
அதேவேளை, உலகளாவிய கள ஆய்வு போன்ற செயன்முறைகள் மூலம் சர்வதேச சமூகத்துடன் இணைவதும் அவற்றுள் அடங்கும்" என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
