பிரித்தானியாவிற்கு மூன்று நாடுகளால் காத்திருக்கும் ஆபத்து: பயங்கரவாத தடுப்பு அதிகாரி எச்சரிக்கை
பிரித்தானிய தெருக்களில் குற்றச்செயல்களை ஊக்குவிக்க ஈரான், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் கயவர்களை களமிறக்கலாம் என பயங்கரவாத தடுப்பு பொலிஸாரின் மூத்த அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த நாடுகள் தங்கள் சார்பாக கயவர்களை களமிறக்கிவிட்டு, தங்கள் பங்கை நிராகரிக்க முடியும் என்றும் மாநகர பொலிஸ் உதவி கமிஷனர் Matt Jukes தெரிவித்துள்ளார்.
குறித்த மூன்று நாடுகளும் பெருந்தொகை பணத்தை செலவிட்டு பிரித்தானியாவில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானால் உயிருக்கு அச்சுறுத்தல்
மேலும், இந்த விவகாரத்தில் நிதானமாக இருக்க விரும்பவில்லை என்றும், ஈரான், சீனா மற்றும் ரஷ்யாவின் நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்துவது கடமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று நாடுகளும் பணத்தை செலவிட்டு, இவ்வாறான செயல்களை பிற நாடுகளில் ஊக்குவிப்பதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஈரானால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் 15 வழக்குகள் கண்டறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இஸ்ரேலில் அக்டோபர் 7 தாக்குதலுக்கு பின்னர் சாத்தியமான பயங்கரவாத குற்றங்கள் தொடர்பாக பிரித்தானியாவில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam