பிரதமர் பதவி எனக்குத் தேவையில்லை : அமைச்சரின் அறிவிப்பு
நான் எனது விரல் அளவுக்கு வீங்கும் மனிதன். நான் பதவி கேட்டு அலைபவன் அல்ல. பிரதமர் பதவி எனக்குத் தேவையில்லை என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அச்சமின்றி முன்வந்த ஜனாதிபதி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தினேஷ் குணவர்தன அவர்கள் பிரதமராக சிறப்பாக பணியாற்றி வருகிறார். எனவே, அந்த நிலையை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
நாம் இப்போது பொருளாதாரத்தை வலுப்படுத்தப் பார்க்கிறோம். இது ஒரு தேசிய பிரச்சினை. அதனால், தேவையில்லாத பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டியதில்லை.
எங்கள் கட்சிக்கு ஒரு தலைவர் இருக்கிறார். ஜனாதிபதி வேட்பாளருடன் சேர்ந்து தீர்மானங்களை எடுக்கும் கட்சியாகும். போரில் வெற்றி பெற்று நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காகவே மகிந்த ராஜபக்சவை நியமித்தோம்.
நல்லாட்சியை ஏற்படுத்தவே மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி கோட்டாபய தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டார்.
தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த சவாலை முறியடிக்க தற்போதைய ஜனாதிபதி அச்சமின்றி முன் வந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் வரிசையில் நின்று அவதிப்பட்டோம். ஆனால் இப்போது நாம் ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் இருக்கிறோம். இந்த நெருக்கடி ஏற்படும் போது மற்ற அனைத்தும் மறைக்கப்பட்டன என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |