திருகோணமலை - உப்புவெளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபரொருவர் உயிரிழப்பு
திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருமலை - நிலாவெளி பிரதான வீதியின் ஆனந்தபுரி பகுதியில் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவர்மீது அவ்வீதியால் பயணித்த மலர்சாலை வாகனம் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இச்சம்பவம் இன்று (20) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சடலம் மீதான பிரேத பரிசோதனைகள்
குறித்த விபத்தில் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளதுடன், பரிசோதனை முடிவுற்ற பின்னர் உறவினர்களிடம்
ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு
வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
நட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

இதய திருடன் படத்தில் நடித்த இந்த நடிகையை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
