திருக்கோணேஸ்வரம் ஆலயத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பயணம் (Photos)
திருகோணமலை-திருக்கோணேஸ்வரம் ஆலயத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பயணமொன்றினை மேற்கொண்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன், திருகோணமலை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் நேற்று (30) சென்று பார்வையிட்டுள்ளனர்.
புதிதாக கட்டப்பட்ட கடைத் தொகுதிகள்

திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கு செல்லும் பிரதான இரு பக்கங்களிலும் கடைத் தொகுதிகள் அமைக்கப்பட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதனை பார்வையிடுவதற்காகவே அவர்கள் இப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
திருக்கோணேஸ்வர ஆலயத்தின் புனித தன்மையை சீரழிக்கும் நோக்கில் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்தும் விசேடமாக ரத்னபுரி மாவட்டத்தில் இருந்து ஆட்களை கொண்டு வந்து இங்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும், இது நீண்ட காலமாக இருக்கின்ற பிரச்சினையாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
காணி

“ஆனாலும் அண்மையிலே இவர்களுக்கு இப்பிரதேசத்துக்குள்ளே வேறு இடத்தில் காணிகளை வழங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து நாங்கள் எங்களுடைய எதிர்ப்பினை வெளியிட்டு இருந்தோம். இலங்கை தமிழரசு கட்சியினுடைய மத்திய செயற்குழு கூட்டத்தின் போது கடந்த வாரம் திருக்கோணேஸ்வரம் ஆலய பிரச்சினைகள் பற்றி ஆராய்வதற்காக குழுவொன்று நியமித்திருந்தோம்.

இருந்த போதிலும் திருகோணமலை மாவட்ட குழுவுடன் பேசுவதற்கு முன்னர் விஜயம் மேற்கொண்டதாகவும்” எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, திருகோணமலை மாவட்ட தமிழரசுக் கட்சியின் கிளை தலைவர் சன்முகம் குகதாஸன், முன்னாள் நகர சபை தலைவர் கே.செல்வராஜா (சுப்ரா) மற்றும் வெள்ளத்தம்பி சுரேஸ் என பலரும் கலந்து கொண்டனர்.



திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam