திருகோணமலையில் தொடர்ச்சியாக இடம்பெறும் மணல் அகழ்வு! கொந்தளித்த கிராம மக்கள்(Photos)
திருகோணமலை - வெருகல் நாதனோடையில் மணல் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியிலுள்ள மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று (28.08.2023) இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மணல் அகழ்வதினால் பாதிப்புகள் ஏற்படலாம் என தெரிவித்தே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வெருகல் நாதனோடையில், மணல் அகழ்வதற்காக வெருகல் பிரதேச செயலகம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் வழியை மறைத்து மணல் ஏற்றுவதற்காக சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதிப்பு
2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தினால் சிறியளவில் காணப்பட்ட வெருகல் நாதனோடை பெரிதாக உடைப்பெடுத்துள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் மக்கள் இடம்பெயர்ந்து வேறு கிராமங்களில் வசித்து வந்ததாகவும் அக்காலப் பகுதியில் திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதி வெள்ள நீரினால் மூழ்கி காணப்பட்டதாகவும் மேலும் சுட்டிக்காடியுள்ளனர்.
இந்நிலையில் அந்த பகுதியில் மணல் அகழ்வதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதால்,அதற்கு பிரதேச மக்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |











அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
