சர்வதேச குற்றவியல் விசாரணை தேவை: கஜேந்திரன் எம்.பி வலியுறுத்து
சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்கி அரசாங்கம் சர்வதேசத்தை ஏமாற்றியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் (Selvarasa Gajendran) தெரிவித்துள்ளார்.
மூதூரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது கைது செய்யப்பட்டவர்களின் நிலை தொடர்பில் இன்று (16.05.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை
தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
"இந்த மாதம் தமிழர்களுக்கு வலி சுமந்த மாதமாகும். தமிழர்களை 15 வருட காலமாக ஏமாற்றி வரும் இந்த அரசு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தொடர்பாக அவர்களை நினைவு கூற விடாமல் தடுத்துள்ளது.
இந்த நிலையில் மூதூரில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் ஐ.சி.சி.பி ஆர் தொடர்பான அறிக்கையை பொலிஸாரிடம் நீதிமன்றம் கோரியுள்ளது.

இது தொடர்பில் சமர்ப்பணங்களை முன்வைத்து நீதிமன்றில் வாதாடிய சிரேஷ்ட சட்டத்தரணி சுகாஷ் மற்றும் முஸ்லிம் சட்டத்தரணிகளுக்கு இந்த நேரத்தில் நன்றிகளை தெரிவிக்கிறேன்.
பொய்யான குற்றச் சாட்டை பொலிஸார் முன்வைத்து நீதிமன்றில் தடை உத்தரவை பெற்று நீதிமன்றை ஏமாற்றியுள்ளனர். தற்போது நீதிமன்றம் தடையை நீக்கியுள்ளது.
முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது அவர்கள் உணவை ஆயுதமாக பயன்படுத்தி கஞ்சியை சிறு குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளனர்.

தமிழர்கள் இந்த மாதத்தில் களியாட்டங்களை தவிர்த்து உணர்வு பூர்வமாக நினைவேந்தலில் ஈடுபடுகின்ற வலி சுமந்த மாதமாக காணப்படுகிறது.
உள்ளக பொறி முறை மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது ஒற்றையாட்சி முறையை நீக்கி சமஷ்டியை கொண்டு வரவேண்டும் என்பதுடன் தமிழ் தேச மக்கள் எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும்" என்றார்.
தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கு எதிரான வழக்கு தொடர்பில் தீவிர ஆர்வம் காட்டிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஜூன் 21 முதல் இந்த 3 ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி தான்! Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri