திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர், உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வும் முதலாவது சபை அமர்வும் இன்று (30.06.2025) சபையின் மண்டபத்தில் இடம்பெற்றது.
பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் வெள்ள தம்பி சுரேஷ் தெரிவு செய்யப்பட்டார்.
தவிசாளர் உட்பட உப தவிசாளர் உறுப்பினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டனர்.
முதலாவது சபை அமர்வு
இதில் இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் கலந்து சிறப்பித்தார். இதனை தொடர்ந்து சபையின் முதலாவது சபை அமரவும் இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் இந்த சபை அதிக வருமானம் ஈட்டக் கூடிய சபையாக உள்ளது. இங்கு பிறீமா, டோக்கியோ சீமெந்து தொழிற்சாலை காணப்படுகின்றது. மொத்த வருமானத்தில் ஒரு சத வீதம் வரி அறவிட வேண்டும் என்பதுடன் சிறந்த நிர்வாகத்தை நடாத்த சக ஊழியர்கள் இணைந்து தவிசாளருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எனவே தான் சொத்து வரி, ஹோட்டல்களுக்கான வரி உள்ளிட்ட அனைத்தையும் மீள் அறவீடு செய்து சபையின் வளர்ச்சிக்காக திறம்பட செயற்பட்டால் சபையை வளர்ச்சியடைய செய்யலாம் என்றார்








