தாஜுதீன் கொலைக்கு பக்கச்சார்ப்பற்ற விசாரணை தேவை..! நாமல் தெரிவிப்பு
தாஜுதீன் கொலை தொடர்பில் பக்கச்சார்ப்பற்ற விசாரணைகளை நடத்தி உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்குமாறு மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தாஜுதீன் கொலை தொடர்பில் எழுந்துள்ள கருத்துக்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு கதைகள்
தொடர்ந்து பேசிய அவர், நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து ராஜபக்சக்களுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
அரசாங்கம் தேர்தல் மேடைகளில் குறிப்பிட்ட கருத்துக்கள் பொய்யானது. அதை நிரூபிக்க இன்று முயற்சிக்கிறது. அன்று பொய்ச் சாட்சிகளை சோடித்தவர்களே இன்றைய அரசாங்கத்திலும் முக்கிய பதவிகளில் இருக்கின்றனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் அதை நீதிமன்றத்தில் தெரிவிப்பதே சிறந்ததாகும். நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டிய கருத்தை ஊடகங்களில் தெரிவிப்பதென்பது, அதில் அரசியல் இலாபம் தேடுவதே எதிர்ப்பார்ப்பாகும்.
யாராவது ஒரு பெண் இடுப்பில் கை வைத்துக் கொண்டிருப்பவர் தனது கணவர் கஜ்ஜா தான் என்கிறார். அவர் அண்மைக்காலங்களில் யாருடன் இருந்தார் எங்கியிருந்தார் என பொலிஸார் விசாரணை நடத்த வேண்டும்.
இந்த அரசாங்கம் ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு கதைகளை உருவாக்குகிறது.ரணில் விக்ரசிங்கவின் கிழமை ஒன்றிருந்தது அதன் பின்னர் ஐஸ், இன்றைய கிழமை தாஜுதீன் ஆகும் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விமானத்தில் கலாட்டா செய்த பிரித்தானியரை காதைப் பிடித்து இழுத்துச் சென்ற பிரான்ஸ் பொலிசார்: ஒரு வைரல் வீடியோ News Lankasri
