திருகோணமலையில் வெடிபொருட்களுடன் இருவர் கைது
திருகோணமலை - இறக்ககண்டி பகுதியில் சட்டவிரோத வெடிபொருட்களுடன் சந்தேகநபர்கள் இருவரை பொலிஸ் அதிரடிப்படையினர் கைது செய்து குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
சட்டவிரோத வெடிபொருட்களை வீட்டில் மறைத்து வைத்திருப்பதாக சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடிப் படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் அங்கிருந்து 85 ஜெலட்னைட் கூறுகளை கைப்பற்றியதுடன் சந்தேகநபர்களை இன்று அதிகாலை 5 மணியளவில் கைது செய்துள்ளனர்.
குறித்த வெடிபொருட்கள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட இருந்த நிலையிலேயே கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை - இறக்கக்கண்டி, வாலையூற்று பகுதியைச் சேர்ந்த முஹம்மது இப்ராஹீம் இமானுவேல் ஹுஸைன் (38 வயது) மற்றும் அதே இடத்தைச் சேர்ந்த ஆப்தீன் அஸீம் (35 வயது) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருவதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.