திருகோணமலையில் மக்களுக்குள்ள குறைபாடுகளை கேட்டறிந்த சண்முகம் குகதாசன்
திருகோணமலை (Trincomalee) - வெருகல் பகுதியில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் மக்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் கலந்தாலோசித்துள்ளார்.
வெருகல் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கு நேற்று அவர் சென்றிருந்த போது அப்பகுதி பாடசாலை ஒன்றில் மாவட்ட மக்கள் வரவேற்பளித்துள்ளனர்.
இதன்போது, கல்வி, சுகாதாரம், சமூக நலன் தொடர்பிலான பிரச்சினைகள் குறித்து மக்கள் தெரிவித்துள்ளதுடன் அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாகவும் மக்களிடம் அவர் கூறியுள்ளார்.
உரிய நடவடிக்கை
மேலும், அங்கு காணப்படும் பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடம் நிலவி வரும் நிலையில் அதனை கருத்திற் கொண்டு ஆசிரியர் நியமனங்களை வழங்கி மாதாந்த கொடுப்பனவுகளை வழங்கி வருகிறோம்.
பிரதேச வைத்தியசாலையின் நலன் கருதி இரு வைத்தியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சண்முகம் குகதாசன் உரையாற்றுகையில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |