திருகோணமலை எண்ணெய் குதங்கள் விவகாரம்: மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் (VIDEO)
திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணியினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை பஸ் நிலையத்திற்கு முன்னால் இன்று(5) மாலை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் சட்டத்தரணி அருன் ஹேமச்சந்திரா தலைமையில் இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை வெளிக்காட்டினார்கள்.
“நாட்டை விற்காதே”, “மக்களை வறுமைக்குழிக்குள் தள்ளாதே” போன்ற துண்டுப் பிரசுரங்களையும், சுவரொட்டிகளையும் ஏந்தி இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.




