திருகோணமலை - மூதூர் கடற்படை முகாம் அதிகாரி இடமாற்றம்!
திருகோணமலை அருகே மூதூரில் அமைந்துள்ள கடற்படை விசேட படையணியின் முகாம் கட்டளை அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இடமாற்றம் நாளை தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
கடற்படைக் கப்பல் விதுர படையணியின் கட்டளை அதிகாரியே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இடமாற்றம்
அவரை கொழும்பில் அமைந்துள்ள கடற்படை தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
கிழக்குப் பிராந்திய கடற்படைக் கட்டளைத் தளபதியின் பரிந்துரைக்கு அமைவாகவே அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே மூதூரில் அமைந்துள்ள குறித்த கடற்படை முகாமினுள் பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்தமை காரணமாகவே அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கண்டனப் பதிவுகள் பரவத் தொடங்கியுள்ளன.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா





4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam
