முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலால் அதிருப்தியடைந்த மக்கள் (Video)
திருகோணமலை- குச்சவெளி பிரதேச சபையினால் சல்லிமுனை பகுதியில் குப்பை கொட்டுவதினால் சூழல் மாசடைவதாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரிடம் கூறியபோதும் இது தொடர்பில் எதுவித நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஜாயா நகரை அண்மித்த சல்லி முனை பகுதியில் குப்பை கொட்டுவதினால் சூழல் மாசடைவது மட்டுமல்லாமல் காட்டு யானைகளின் அட்டகாசம் மற்றும் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், குச்சவெளி பிரதேச சபையினால் குப்பை கொட்டும் சல்லிமுனை பகுதி மழைக் காலங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து குப்பைகளைக் கடல் பகுதிக்குக் கொண்டு வருவதாகவும் இதனால் கடல் வளங்கள் மற்றும் சூழல் மாசடைவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரிடம் கூறிய போது சம்பவ
இடத்திற்கு அவர் வருகை தந்தும் எதுவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும்
அப்பகுதியிலுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பிக்குகளின் போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை: ஏற்பட்டாளர் தித்தகல்லே பிக்குவின் ஊடகவியலாளர் மாநாட்டில்...
சூடுபிடித்துள்ள ஞானசார தேரர் விவகாரம்: விகார மகாதேவி பூங்காவில் முகாமிட்டுள்ள தேரர்கள்! குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்
“இந்த நாட்டில் இரத்தம் சிந்தியது போதும்” மதச் சாயலுக்குள் மீண்டும் பாழாய்ப்போன அரசியல்-புதிய சிறகுகள் அமைப்பு சுட்டிக்காட்டு
Tamizha Tamizha: ஹனிமூன் சென்ற இடத்தில் பெண்ணிற்கு நடந்த துயரம்! பதில் பேச முடியாமல் தொகுப்பாளர் Manithan