திருகோணமலையில் பதற்றம்! வீதிக்கு இறங்கிய மக்கள்: பொலிஸார் குவிப்பு(Photos)
திருட்டு சம்பவம் தொடர்பில் திருகோணமலை தலைமையகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜமாலியா பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் வைத்து இன்று (23) மாலை உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து திருகோணமலை ஜமாலியா பகுதியில் வீதிக்கு இறங்கிய மக்கள், டயர்களை எரித்து தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தியமையால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

முதலாம் இணைப்பு
திருகோணமலை ஜமாலியா பகுதியில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரொருவர் பொலிஸ் தடுப்பு காவலில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று (23.08.2023) மாலை 4.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குற்றச்சாட்டு
இவ்வாறு உயிரிழந்த இளைஞன் திருகோணமலை- ஜமாலியா, தக்வா நகரை சேர்ந்த சுபைர் முகம்மது ஜுனைட் (26 வயது) எனவும் தெரியவருகின்றது.
ஜமாலியா- கடற்கரை பகுதியில் 21ஆம் திகதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்
சைக்கிளில் பணத்தை திருடியதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இம்முறைப்பாட்டை அடுத்து குறித்த சந்தேகநபரை 22 ஆம் திகதி மாலை தலைமையக பொலிஸார், பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த இளைஞர் இன்று (23) மாலை தலைமையக பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் இருக்கின்ற மலசல கூடத்திற்குள் தான் அணிந்திருந்த ஆடையைக் கிழித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.

ஆனாலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் எதுவித முறைப்பாடுகளும் பொலிஸ் புத்தகத்தில் எழுதப்படாத நிலையில் இன்று மாலை வரை தடுப்பு காவலில் வைத்திருந்திருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விசாரணை
இதேவேளை உயிரிழந்த குறித்த சந்தேகநபர் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நபரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார் என கேள்விப்பட்டதையடுத்து சிலர் தாக்கி உள்ளதாகவும் தெரிய வருகிறது.
ஜமாலியா- லவ்லேன் பகுதியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அலி சப்ரி முஹம்மட் ரிஸ்வான் (40வயது) மற்றும் அலி சப்ரி கடாபி (44வயது) ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
இளைஞனின் மரணம் தொடர்பில் திருகோணமலை- தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞரை நீதிமன்றத்தில் முற்படுத்தாமல் தடுப்பு காவலில் வைத்திருந்தமை தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு மரணத்திற்காக நீதியை பெற்றுத்தருமாறு உயிரிழந்தவரின் பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
You may like this video




விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோரை தொடர்ந்து சூரியுடன் இணையும் இளம் சென்சேஷனல் நடிகை..? யார் தெரியுமா? Cineulagam
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri