கஸ்ஸப தேரரின் அச்சுறுத்தல்: உண்மையை கூற அஞ்சும் மூன்று பிக்குகள்
திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் இனவாதம் பேசிய கசுன் திலுக்க குலரத்தன என்ற பெயரை கொண்ட பாலாங்கொடை கஸ்ஸப தேரர்,சிறையில் இருக்கும் மூன்று தேரர்களை பயமுறுத்தி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக தெரியவந்தள்ளது.
கஸ்ஸப தேரரின் நோக்கம்
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் மற்றும் சட்ட விரோத கட்டுமானங்கள் தொடர்பில் ஒன்றும் அறியாமல் இதில் சம்பந்தப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரி வழக்கிலிருந்து விடுபட மூன்று பௌத்த பிக்குகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் பலாங்கொடை கஸ்ஸப தேரரின் அச்சுறுத்தலால் சிறையில் உதவியற்றவர்களாக இருக்கின்றனர். இந்த பிரச்சினையை பௌத்த மக்கள் மத்தில் சிக்கலை ஏற்படுத்தும் நோக்கில் கஸ்ஸப தேரர் செயற்பகிறார்.
குறித்த மூன்று பிக்குகள் வழக்கிலிருந்து விடுதலை பெற்றால் தனது நோக்கம் நிறைவேறாமல் போய் விடும் என்பதால் கஸ்ஸப தேரர் இவ்வாறு செயற்படுகிறார் என தெரியவந்துள்ளது.

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான வழக்கில் கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பௌத்த பிக்குகளுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை போதிராஜ விஹாரையில் புத்தர் சிலையை வைத்ததன் மூலம் கடலோர பாதுகாப்பு சட்டங்களை மீறியதாகக் கூறி கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பௌத்த பிக்குகள் மற்றும் ஐந்து பேர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri